முதலிரவை தள்ளிப் போட்டுக் கொண்டே போன புது மனைவி..கடைசியில் நிகழ்ந்த விபரீதம்..!
திருமண தரகராக வேடம் தரித்த கணவர் தன் மனைவியை திருமணம் ஆகாதவருக்கு மணம்முடித்து கொடுத்து மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ள நிலையில் ராதாகிருஷ்ணன் மதுவுக்கு அடிமையானதால் அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மறுமணம் செய்ய பெண் பார்த்து வந்த ராதாகிருஷ்ணனுக்கு தரகர் மூலம் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயம் செய்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து பெண் வீட்டார் வறுமையில் இருப்பதாகவும் அவர்களுக்கு திருமணத்திற்கு முன் உதவி செய்யுமாறு ராதாகிருஷ்ணனிடம் திருமண தரகர் தெரிவித்திருக்கிறார். இதன்படி சுமார் இரண்டு பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு ராதாகிருஷ்ணன் கொடுத்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் மாதவிடாயை காரணம் காட்டி முதலிரவை தள்ளிப்போட்டு வந்த மணப்பெண் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சிகிச்சைக்காக பொள்ளாச்சி சென்ற நிலையில் திடீரென மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் பெண் மற்றும் நகைகளுக்காக அந்த பெண் ராதாகிருஷ்ணனை மணம் முடித்து ஏமாற்றியதும் இருவரையும் திருமண வரன் மூலம் சேர்த்து வைத்த தரகரே பெண்ணின் கணவர் என்பதும் தெரிய வந்தது. திருமணமாகாத இளைஞர்களை தம்பதி இருவரும் வரும் நூதன முறையில் ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரிய வர புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





