கணவனின் மன்னிக்க முடியாத குற்றத்தால் மகனை பார்க்க விடாமல் பூட்டிய மனைவி..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிறை சென்றதால் பிரிந்து வாழும் மனைவியிடம் இருக்கும் குழந்தையை பார்க்க சென்ற இளைஞர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிபின் என்பவர் ஜெயப்பிரியா என்பவரை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிரியன் என்ற மகன் இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உறவுக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிபின் கைது செய்யப்பட்டார்.
கணவரின் கொடூர குணத்தை செய்ய பிரியா அவரை விட்டு பிரிந்து தக்கலையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தற்பொழுது ஜாமீனில் வெளிவந்திருக்கும் பிபின் தனது மகனை பார்க்க போராடி வருகிறார். மாமியார் வீட்டில் தனி அறையில் இருக்கும் மகனிடம் ஜன்னல் வழியாக அவர் கதறியழும் வீடியோ கண்கலங்க வைக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





