குடிபோதையில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களை விரட்டிய தந்தை, மகன்..!
கிருஷ்ணகிரியில் நண்பனை தாக்கியவர்களை மடக்கி பிடிக்க முயன்ற இளைஞர் மீது இருசக்கர வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இளைஞர்கள் மதுபோதையில் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
அவர்களை அங்கிருந்து போகுமாறு அதே பகுதியைச் சேர்ந்த சின்ன தம்பி அவரது மகன் வெற்றி ஆகியோர் கூறியுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டதால் அந்த இடத்தை விட்டு சென்ற இளைஞர்கள் மீண்டும் முரட்டு கட்டை பாட்டிலுடன் வந்து சின்னத்தம்பி மற்றும் வெற்றியை தாக்கியுள்ளனர்.
பின்னர் 4 இளைஞர்களும் 2 இருசக்கர வாகனங்களில் தப்பிக்க முயன்ற பொழுது வெற்றியின் நண்பர் கார்த்திக் வடம் பிடித்து இழுக்க முயற்சித்தார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தை கார்த்திக் மீது ஏற்றியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்த அவரது தந்தை தேவராஜையும் அங்கிருந்த இளைஞர்களையும் இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சிவா மற்றும் அவரது நண்பர்கள் அருண், கணேஷ், கார்த்தி ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





