கோடை விடுமுறை.. வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு..!
சென்னை நாகர்கோவிலில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் கூட்ட எரிசலை சமாளிக்க சென்னை – நாகர்கோவில் இடையே வந்து பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை – நாகர்கோயில் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் ரயில் சேவை 3ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோயில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை ரயில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





