20 அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்பட்ட கார்..!
அமெரிக்காவில் கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த ரேகா படேல், சங்கீதா படேல் மற்றும் மனிஷா படேல் ஆகியோர் சென்ற கார் தெற்கு கரோலினாவில் உள்ள பாலத்தில் விபத்திற்கு உள்ளானது.
அதிவேகமாக சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்திற்கு பறந்து மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





