--- --:--:-- --

மகனின் நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட தொழிலதிபர்..!

3

உத்திரபிரதேச மாநிலத்தில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் மகனின் நண்பனை மாடியில் இருந்து தொழிலதிபர் கீழே தள்ளியே சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இரண்டு நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு வந்த ஒரு இளைஞரின் தந்தை போதையில் மற்றொரு இளைஞரை சரமாரியாக தாக்கியதுடன் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார்.

 

பலத்த காயம் அடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகன் மன்னிப்பு கேட்ட பிறகும் கீழே தள்ளிவிட்டார் என்று பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon