--- --:--:-- --

உக்ரைனில் தனியார் தொலைக்காட்சி சிக்னல் கோபுரத்தை இரண்டாக உடைத்து போட்ட ரஷ்யா..!

4

உக்ரைனில் தொலைக்காட்சிக்கான சிக்னல் கோபுரம் ரஷ்ய வான்வழி தாக்குதலில் இரண்டாக உடைந்தது. உக்கரைனின் கார்கீவ் நகரில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு ஏவுகணைகளை உக்ரைன் அழித்த பொழுதும் தனியார் தொலைக்காட்சிக்கான சிக்னல் கோபுரம் ஒன்றையும் தாக்கியது.

 

இதில் நிலைகுலைந்த அந்த கோபுரம் இரண்டாக உடைந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அங்கிருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. போர் தொடுத்து இரண்டு ஆண்டுகளைக் கடந்த பொழுதும் தொடர்ந்து தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon