--- --:--:-- --

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது..முன்னாள் மத்திய அமைச்சர்கள் வாக்கு செலுத்தினர்..!

1

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்த ஆர்வமாக வாக்கு சாவடி மையத்திற்கு வருகை தருகின்றனர்.வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணிக்கு திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்தார்.

 

முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ப. சிதம்பரம் தங்களது வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினர்.கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது வாக்கினை கணபதி பகுதியில் உள்ள எஸ்.இ.எஸ் மெட்ரிக் பள்ளியில் பதிவு செய்தார்.

 

தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விருகம்பாக்கத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon