உளுந்தூர்பேட்டையில் சமயபுரத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்..!
உளுந்தூர்பேட்டையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிழக்கு கந்தசாமிபுரத்தில் உள்ள இந்த கோயிலின் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்பொழுது பெண்கள் பம்பை உடுக்கைக்கு ஏற்றவாறு சுவாமி ஆடியபடி வீதி உலா வந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





