20 நாட்களாக போராட்டம்.. தேர்தலை புறக்கணிக்க முடிவு..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அடிப்படை வசதி நிறைவேற்றி தரவில்லை என மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை பேரூராட்சிக்குட்பட்ட விசுவநாதபுரம் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் அந்த பகுதியினர் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். தனிநபர் அமைத்துள்ள வேலியையும் அகற்றக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பலகை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த 20 நாட்களாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி, மக்கள் போராடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





