--- --:--:-- --

நெல்லையில் நாம் வெற்றி பெறுவது டவுட் தான்.. திமுக அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!

7

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் அணுகுமுறை சரி இல்லை என்றால் அதனால் அவர் வெற்றி பெறுவது டவுட்டாக உள்ளது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

ராமநாதபுரம் தொகுதி ஐ.யு.எம்.எல் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அந்த தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கரூர் கிராமத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பரப்பரை மேற்கொண்டார். நெல்லையில் ஒரு தொகுதி மட்டும் தான் கொஞ்சம் டவுட்டாக உள்ளது ஆனாலும் ஜெயித்து விடுவோம் என தெரிவித்தார்.

 

அந்த தொகுதி வேட்பாளரின் அணுகுமுறை கொஞ்சம் பத்தவில்லை எனக் கூறிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் இருந்தாலும் அவர் துணிச்சல் காரர் பிரச்சனை ஒன்றும் இல்லை ஜெயித்து விடுவோம் என தெரிவித்தார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon