நடிகை ராதிகாவுடன் தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்..!
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் பாஜக நிர்வாகிகள் போட்டி போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டையை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
காங்கிரஸ் புகாரை பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பாஜக தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியினரும் தர்ணாவில் ஈடுபட்டதால் மேலும் பதற்றம் நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





