--- --:--:-- --

கிரேன் மூலம் வந்த பிரம்மாண்ட ரோஜா மாலை.. காமராஜருக்கு அணிவித்த தொண்டர்கள்..!

8

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கொட்டும் மழையில் பனங்காட்டுப்படை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு பிரம்மாண்ட மலர் மாலையை கிரேன் மூலம் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

மேளதாளங்கள் முழங்க பனங்காட்டு படை கட்சி நிர்வாகி அந்தோணி நாடார் தலைமையில் கட்சி தொண்டர்கள் கொண்டு வந்த பிரம்மாண்ட ரோஜா மாலை கிரேன் மூலம் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிலைக்கு அனுப்பப்பட்டது.

 

திடீரென பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அந்த கட்சியின் தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon