திருச்சியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழாம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை கொண்டாடப்படுவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை ஈடு செய்யும் விதமாக இன்று 8ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





