--- --:--:-- --

இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பு..!

9

திண்டுக்கல் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முகமது முபாரக் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாத விநாயகர் கோவிலில் இருந்து பிரச்சாரத்தில் இருந்தார்.

 

தேவர் சிலை பேருந்து நிலையப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். காந்தி மார்க்கெட் வழியாக பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon