--- --:--:-- --

வட மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் அதிருப்தி..!

7

வில்லிவாக்கம் அருகே உள்ள ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் அப்பெண்டிக்ஸ் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வட மாநில இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் அதிருப்தி அடைந்த அப்பன்டிக்ஸ் ஊழியர்கள் பணி மூப்பு அடிப்படையில் தங்களை பணியமர்த்த வலியுறுத்தி கோயம்பேட்டில் அமைந்துள்ள தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கவும் வந்தனர்.

 

அங்கிருந்த போலீசார் 250க்கும் மேற்பட்ட அப்பெண்டிக்ஸ் ஊழியர்களை பேருந்தில் ஏற்றினர். அப்பொழுது போலீசார் அப்பெண்டிக்ஸ் ஊழியர்களின் சட்டையை பிடித்து இழுத்தும், கழுத்தை பிடித்தும் தள்ளிய வீடியோ வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon