மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே திமுக சண்டை மூட்டி விட்டுள்ளது..!
மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் கிடைக்காததால் குடும்பங்களில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே திமுக சண்டை மூட்டி விட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அதிமுக வேட்பாளரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தவர் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மகளிர் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் கிடைக்காததால் குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





