--- --:--:-- --

திடீரென தோட்டத்திற்குள் இறங்கி கரும்பு வெட்டி வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்..!

5

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வந்த்தாமனுக்கு ஆதரவாக நடிகர் கூல் சுரேஷ் கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டி வாக்கு சேகரித்தார்.

 

திருவண்ணாமலை அருகே வயலில் கரும்பை வெட்டிக் கொண்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து கரும்பை வெட்டி டிராக்டரில் ஏற்றி பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

 

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் சின்னம் தாமரை என்றும் விவசாயிகளுக்கு இன்னும் பயனுள்ள திட்டங்களை செய்ய வேண்டும் என்றால் பாஜக வேட்பாளர் அஸ்வந்த்தாமனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon