நகருக்குள் புகுந்த கரடியால் அச்சமடைந்த பொதுமக்கள்..!
நெல்லை மாவட்டம் அம்பையருகே கள்ளிடைகுறிச்சி நகருக்குள் திடீரெனப் புகுந்த கரடி ஒன்று நகரத் தெருகளில் தரிக்கெட்டு ஓடியது. இதனை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில் லட்சுமி என்ற பெண்ணை கரடி தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து அம்பை வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் கள்ளிடைகுறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரடி தரிக்கெட்டு ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





