சென்னையில் கொத்தாக மீட்கப்பட்ட தங்க நகைகள் பறக்கும் படையினர் பறிமுதல்..!
சென்னை சவுகார்பேட்டை சாலையில் வாகன தணிக்கையின் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 67 கிராம் எடையிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சௌகார்பேட்டையில் உள்ள நாகை பட்டறையில் கொடுப்பதற்காக சுரேஷ் என்பவர் நகைகளை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





