--- --:--:-- --

மாலை போட்டு மகுடம் சூடி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு..!

8

அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு பெண்கள் மகுடம் சூடி உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இந்தியா கூட்டணி அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அவருக்கு ஆரத்தி எடுத்தும் பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அப்பொழுது பேசியவர் தமிழக முதலமைச்சர் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் பாவித்து உரிமைத்தொகை வழங்குவதாக கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon