--- --:--:-- --

கரூரில் வீடு வீடாக சென்று ஜோதிமணி தீவிர பிரச்சாரம்..!

9

கரூரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி பஞ்சமாதேவி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

கரூர் பாராளமன்ற தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பஸ் ஸ்டாப் தாரணி நகர், பசுபதிபாளையம், காலனி அருகம்பாளையம், பஞ்சமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று பொது மக்களிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சியாக திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon