மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..?
ஏப்ரல் மாதம் முதல் நாளில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.சென்னையில் நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று ஏப்ரல் 4ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,545க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.84.00க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




