--- --:--:-- --

ஒரே ஒரு இரவில் 3 வீடுகளில் கொள்ளை.. அதிர்ச்சியில் மக்கள்..!

9

வேடசந்தூர் அருகே ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வடமதுரை ஓம்சக்தி கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பத்து சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர்.

 

அதேபோல பேக்கரி ஊழியர் காளிதாஸ் மற்றும் ஹோட்டல் கடை வைத்திருக்கும் சத்தியமூர்த்தி ஆகியோரின் வீட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் திருடியுள்ளனர். இது குறித்த வடமதுரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon