மீண்டும் மீண்டும் ரத்தாகும் அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணம் மீண்டும் ரத்தாகியுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது தமிழ்நாடு பயணம் மாற்றம் செய்யப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இன்றிரவு 11 மணிக்கு, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா மதுரை வர உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அமைச்சர் அமித்ஷா பரப்புரையை தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கையில் வாகனப் பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் மீண்டும் ரத்தாகியுள்ளது. அதன்படி அமித் ஷா இன்றிரவு தமிழ்நாடு வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




