பயங்கர சப்தத்துடன் வெடித்த பாய்லர்.. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சங்கரெட்டி மாவட்டத்தில் சந்தாபூர் கிராமத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீர் என பயங்கர சப்தத்துடன் பாய்லர் வெடித்தது. அப்பொழுது பணியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பீகார் மண்டலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்விடத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதரன், ராஜேந்திரன் நரசிம்மா, சங்கரட்டி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





