அரசியல் கட்சியினரின் சின்னங்களை சுண்ணாம்பு பூசி அழித்த மக்கள்..!
சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையத்தில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்த காமராஜ் நகர் பகுதி மக்கள், தங்களது பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சின்னங்களை சுண்ணாம்பு பூசி அழித்தனர்.
தங்கள் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை எந்த அரசியல் கட்சியினரும் தீர்த்து வைக்கவில்லை என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





