ஆந்திராவின் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி..!
ஆந்திர மாநிலத்திற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் மூன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து எட்டு பேர் அப்டேட் வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து ஐந்து பேர், பீகாரில் இருந்து மூன்று பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





