--- --:--:-- --

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்..!

5

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆபத்தை உணராமல் காட்டு யானை அருகே காரை நிறுத்தி சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

 

தற்பொழுது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே நடமாடுகின்றனர். வனப்பகுதி சோதனை சாவடி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ஒன்று சாலையில் நின்றது.

 

காரை நிறுத்தி தங்களது குழந்தைகளை காரின் மேற்பகுதி வழியாக யானையை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வனவிலங்குகளை தொந்தரவு செய்வதால் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

 

என வனத்துறையினர் தெரிவித்த்துள்ளனர். வனவிலங்குகளுக்கு தொல்லை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்திக் கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon