--- --:--:-- --

திருவிழாவில் தகராறு.. தடுக்க சென்ற காவலர் மீது தாக்குதல்..!

4

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்தார். அனந்தபுரம் பகுதியில் காளிகாம்பாள் திருவிழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

 

திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவலர் நிகழ்விடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தகராறை தடுக்க முயற்சித்த போது ஒரு கும்பல் தாக்க தொடங்கியுள்ளது.

 

இதில் அவர் காயமடைந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். காவலரை சிலர் தாக்கும் காணொளியும் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon