தார் சாலை, குடிநீர் கேட்டு கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..!
திருவள்ளூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தார் சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடையான் தெரு கிராமத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருப்பதால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் சுடுகாட்டு பாதை மேலும் மோசம் அடைவதால் வயல்வெளி வழியாக உடல்களைக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனிடையே தார் சாலை அமைக்கப்பட வேண்டும்.
முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





