--- --:--:-- --

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம்..!

9

ழியர்களின் பணிநேரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் விமான போக்குவரத்து இயக்குனரகம் திடீரென ஆய்வு மேற்கொண்டதில் ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய இரண்டு பயணிகளும் 60 வயதானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் விமானிகளுக்கு வார விடுப்பு சரியாக வழங்குவதில்லை, நேர நீட்டிப்பு, நீண்ட தூர பயணங்களுக்கு பிறகு விமானங்களுக்கு போதுமான ஓய்வு வழங்கப்படுவதில்லை என்பன உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்து வருவதை கண்டறிந்து இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

 

ஆனால் இதற்கு ஏர் இந்திய நிறுவனம் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாததாக தெரிவித்த விமான போக்குவரத்து இயக்குனரகம் அந்நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon