வெறி நாய் கடித்து பெண்கள், குழந்தைகள் என 20 பேர் படுகாயம்..!
திருப்பூர் அருகே வெறிநாய்க்கடித்து படுகாயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே வெறிநாய்க்கடித்து படுகாயம் அடைந்த பெண்கள் குழந்தைகள் என 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் புறநோயாளிகளாகவும் எட்டு பேர் மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வெடிநாய்க்கடிக்கான மருந்து போதுமான அளவு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதில் எட்டு பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





