டேங்கர் லாரிக்குள் ரகசிய அறை.. அதிர்ச்சியில் உறைந்த ஓனர்..!
ஈரோடு அருகே பெட்ரோல் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து நூதன முறையில் 250 லிட்டர் பெட்ரோல் திருடிய லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். கவுண்டச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ராஜா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் சப்ளை செய்ய கோவையிலிருந்து டேங்கர் லாரி ஒன்று வந்தது.
அப்பொழுது அந்த டேங்கர் லாரியில் சுமார் 250 லிட்டர் அளவிலான பெட்ரோல் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கீர்த்தி ராஜா இது குறித்து விசாரித்த பொழுது லாரியில் உள்ள டேங்கில் உட்புறத்தில் சிறிய அளவிலான ரகசிய டேங்க் பொருத்தி பெட்ரோலை திருடி இருப்பது தெரிய வந்தது.
பெரிய லாரி ஓட்டுனரான தேனியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





