--- --:--:-- --

சென்னையில் முக்கிய தியேட்டர் மூடல்..!

1

சென்னை நகரில் அடையாளமாக திகழ்ந்த இடங்களில் உதயம் திரையரங்கம் பிரபலமானது. அசோக் நகரில் இருக்கும் இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக அந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் வருவது குறைந்து விட்டது. மேலும் திரையரங்கை மல்டிபிளக்ஸ் ஆகாமல் பழைய படியே படங்களை திரையிட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் உதயம் திரையரங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை பிரபல கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பத்து நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது. உதயம் திரையரங்கு இருக்கும் இடத்தில் பலமாடி அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே சாந்தி திரையரங்கம் மூடப்பட்டு அந்த இடத்தில் வேறு கட்டடம் கட்டப்பட்டு வியாபார அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேப்போன்று அபிராமி மெகா மால் வளாகம் இடிக்கப்பட்டு அங்கு திரையரங்குடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிடி தளங்களின் வருகையால் தற்போது உதயம் திரையரங்கும் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon