தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் நிவாரண பொருட்கள்..!
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தினமும் மூன்று வேலை உணவு, தண்ணீர், பிரட் மற்றும் தேவையான பெட் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அரிசி, தண்ணீர், பால், உணவு, பிரெட், பிஸ்கட், பெட்ஷீட் போன்ற நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாம்களுக்கும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





