மோடியின் உருவ பொம்மை எரிப்பு..!
சேலத்தில் 141 எம்பிக்களை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை விசிக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் உடைய மக்களவை செயலகம் அதிரடியாக தடை விதித்தது. இதனை கண்டித்து பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாடாளுமன்ற வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பெரியார் சிலையின் முன் அந்த கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தும் மோடியின் படத்தை கிழித்தும் கண்டனங்களை தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் தடுக்க முற்பட்ட பொழுது போலீசாருக்கும் விசிக கட்சியனருக்கும் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





