சிறுவனை கடத்தி சென்ற கும்பல்.. மடக்கிப் பிடித்த காவலர்கள்..!
சேலம் அருகே 8 வயது சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை மடக்கிப் பிடித்த காவல்துறை கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். ஓமலூர் அடுத்த தஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன வெங்கடாசலம் என்பவர் குழந்தையை தத்தெடுத்து கொடுப்பதாக கூறியதை நம்பி தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 1 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் கூடிய கூறியபடி வெங்கடாசலம் குழந்தையை தத்தெடுத்து கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த வெங்கடேஷ் தனது கூட்டாளிகளுடன் வந்து வெங்கடாசலத்துடன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
அவர் பணம் தர மறுத்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த அவரது எட்டு வயது மகனை அந்த கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஓமலூர் காவல்துறையினர் பெங்களூருக்கு சென்று கடத்தல் கும்பலை மடக்கி பிடித்துள்ளது.
வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





