பைக் ஹார்ன் அடித்தும் வழிவிடாத மாணவர்களை அடித்த போதை இளைஞர்கள்..!
புதுச்சேரியில் சாலையில் வழிவிடாமல் சென்றதாக கூறி பள்ளி மாணவர்களை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பாரதி பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் பள்ளி முடிந்ததும் கைகோர்த்தபடி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் பலமுறை ஹார்னடித்தும் மாணவர்கள் வழி விடாமல் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்ததால் அவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் அவர்களும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எனவும் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





