பல கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள நடிகை டாப்ஸி

மிழ் திரையுலகில் சில நாயகிகள் தமிழே தெரியவில்லை என்றாலும் முக்கியமான படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றனர். அப்படி தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருந்தவர் தான் நடிகை டாப்ஸி.

 

இவர் தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்திருந்தாலும் இப்போது அதிகம் ஹிந்தியில் தான் படங்கள் நடித்து வருகிறார். அதோடு சொந்தமாகவும் தொழில் தொடங்கி அதையும் வெற்றிகரமாக நடத்துகிறார்.

 

டாப்ஸி பண்ணு, புதிய மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரை கடந்த வார இறுதியில் வாங்கி அசத்தியுள்ளார் இந்த காரின் விலை ரூ. 3.5 கோடி என கூறப்படுகிறது. டாப்ஸி காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.