மகளிர் உரிமை தொகையை வைத்து நடக்கும் மோசடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஓடிபி கேட்டு மோசடியில் ஈடுபடுவதால் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்த காஞ்சிபுரம் பகுதியில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சரின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு நேற்று முதல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட உள்ளது. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தில் தனது குறுஞ்செய்தி வந்தவுடன் இந்த மோசடியை தொடங்கியுள்ளது.
பெண்களின் செல்போனை தொடர்பு கொண்ட மோசடி கும்பல் மகளிர் உரிமை தொகையை செலுத்த ஓடிபி எண்ணை தெரிவிக்குமாறு கூறி மோசடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். எனவே பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ஓடிபி கேட்பதில்லை என்று விளக்கமளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





