சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை..!
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் தொல்லை கொடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை அழைப்பானை அனுப்பி உள்ளது.
சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்தார். குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோ, புகைப்படம், பண பரிவர்த்தனை குறித்த ஆதாரங்களையும் விஜயலட்சுமி காவல்துறையில் ஒப்படைத்தார்.
இது பற்றி சீமான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் விஜயலட்சுமி கடந்த 1ம் தேதி அன்று திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நேரில் வாக்குமூலம் அளித்தார். மதுரவாயில் காவல் நிலையத்தில் வைத்து துணை ஆணையர் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த சீமானிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருக்கிறது. இதற்காக வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
அதில் விஜயலட்சுமி அளித்துள்ள புகார் குறித்த விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணையில் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





