--- --:--:-- --

சிங்கப்பூரில் அதிபர் ஆன தமிழர் சீன வம்சாவளிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

5

166 ஆண்டுகால ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக ரயில்வே வாரியத்தின் தலைவராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்கா என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

முன்னதாக இவர் ரயில்வே வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய ரயிலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர் பல்வேறு முக்கிய பதவிகள் வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பாக வங்கதேசம் தாகாவிலுள்ள இந்திய தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக இவர் பணியாற்றிய போது கொல்கத்தாவில் இருந்து தாஹா செல்லும் புகழ் பெற்ற விரைவு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon