--- --:--:-- --

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்னும் 6 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

1

மிழகத்தில் வடக்கு கடலோர பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்னும் ஆறு தினங்களுக்கு இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon