பாதாம் என நினைத்து ஆமணக்கு விதையை சாப்பிட்ட மாணவிகள்..!
ஈரோடு மாவட்டத்தில் ஆமணக்கு விதையை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. நத்தமேடு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிகொண்டிருந்தனர்.
அந்தப் பகுதியில் ஆமணுக்கு செடியில் இருந்த விதையை அவர்கள் பாதாம் கொட்டை என நினைத்து உடைத்து அதன் பருப்பை சாப்பிட்டதாக தெரிகிறது.
வீட்டிற்கு சென்ற 19 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனுக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





