நீட் தேர்வு விவகாரம் – மத்திய அரசை கண்டித்து போராட்டம் அறிவிப்பு..!
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெரும் முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வந்தாலும் அதன் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அவை முட்டுக்கட்டையாக இருந்து வருவதாகவும், மாணவர்களின் மரணங்கள் ஆளுநரையும், மத்திய அரசையும் துளியும் பாதிக்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப் போட்டி நடந்துகொள்ளும் மத்திய அரசிடம் இல்லாத அதிகாரம் இருப்பது போல் செயல்பட்டு வரும் ஆளுநரை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக இளைஞரணி மாணவரணி, மருத்துவர் அணி செயலாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





