--- --:--:-- --

மனைவியை கழுத்தறுத்த கணவன்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி..!

10

கேரளாவில் மனைவியின் கருப்பை அறுத்து கொலை செய்ய முயற்சித்த கணவனை போலீசார் கைது செய்தனர். கொல்லம் அருகே பத்தணாபுரம் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மனப்புரம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காவல் நிலையம் சென்ற நிலையில் இருவரும் சேர்ந்து வாழ கோரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

 

ரேவதி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்று கொண்டிருந்த நிலையில் அவரை கணவர் கணேஷ் பின்தொடர்ந்து சென்றார். அப்பொழுது தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவத்தியின் கழுத்தை அறுத்துள்ளார்.

 

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேவதியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் தப்பி ஓட முயன்ற கணேசனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon