--- --:--:-- --

மகளிர் உரிமை தொகை திட்டம்.. பெண்களே இந்த மெசேஜ் வந்ததா..?

9

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணி ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கி சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்காக உதவி எண்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதுவரை கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங்களை அளிக்காதவர்கள் மகளிர் உரிமை தொகையை ரூபாய் 1000 பெறுவது எப்படி என்று உதவுவதற்கு சென்னை மாநகராட்சி உதவி எண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

முதல் கட்ட முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

 

அதாவது நீங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மெசேஜ் வரும். இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வருமாம், இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வரும் என்று கூறப்படுகிறது. நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களை நீங்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon