மனு கொடுக்க வந்த மூதாட்டி.. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மூதாட்டி திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி அம்மாள். இவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க தனியாக வந்துள்ளார்.
அப்பொழுது மூதாட்டி பழனியம்மா ஆட்சி அலுவலக வளாகத்தில் மயக்கமடைந்து தரையில் படுத்துவிட்டார். ஆட்சியாளர்கள் பாதுகாப்பில் இருந்த போலீசார் அப்பொழுது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மூதாட்டியை எழுப்பி உட்கார வைத்து விசாரித்தார்.
காலை உணவு சாப்பிடாமல் வந்ததால் மயக்கம் அடைந்ததாக மூதாட்டி கூறியதால் அவருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உணவு வாங்கி கொடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





