மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை அருகிலேயே கட்டி தர கோரி மாணவர்கள் போராட்டம்..!
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உன் அய்யனார் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளியாக தரவு உயர்ந்த வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். ஒன்றாவது வார்டில் செய்யப்பட்டு வரும் அய்யனார் உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்காக மூல தோப்பு லக்ஷ்மி நகர் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு புதிய பள்ளிகட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த கட்டடம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஏற்கனவே பள்ளி செயல்பட்டு வரும் பகுதிகளிலேயே மேல்நிலைக் கல்வி கட்டடத்தை கட்டிக் கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கெடுத்த பெற்றோர்கள் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





